இலங்கை பிரதான செய்திகள்

விஸ்வமடு மாவீரர் துயிலும் இல்லத்தை சுத்தம் செய்ய இராணுவத்தினர் அனுமதி மறுப்பு:-


கிளிநொச்சி – விஸ்வமடு பிரதேசத்தில் மாவீரர் துயிலும் இல்லம் உள்ள பகுதியை சுத்தம் செய்யச் சென்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள், மக்களுடன் அங்கிருந்த இராணுவத்தினர் முரண்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள இந்தப் பகுதியில் நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதனை அடுத்து எதிர்வரும் 27ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தை முன்னிட்டு, குறித்த பகுதியில் சிரமதானம் செய்யச் சென்ற தமக்கு, இராணுவத்தினர் அனுமதியளிக்க மறுத்தனர் என, மக்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு வட மாகாண சபை உறுப்பினர்களான, டி.குருகுலராஜா மற்றும் எஸ்.பசுபதிப்பிள்ளை ஆகியோர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.