இந்தியா பிரதான செய்திகள்

இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு:-


இந்தியாவின் 8 மாநிலங்களில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்கக் கோரும் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், லட்சத்தீவுகள், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர் ஆகிய 8 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.  அவர்களுக்கான சட்டப்பூர்வ சலுகைகள் பெரும்பான்மையினரால் தடுக்கப்படுகின்றன. மாநில அளவில் அவர்களை சிறுபான்மையினராக அடையாளம் காணப்படாமை அல்லது அறிவிக்கப்படாமையே இதற்கு காரணம் எனச் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும் தொழிற்கல்வித் துறையில் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு 20 ஆயிரம் கல்வி உதவித்தொகைகளை வழங்கப்படுகின்ற போதிலும் இந்து மாணவர்கள் எவருக்கும் இத்தொகை வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார். குறித்த மனு நேற்றயைதினம் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த விவகாரத்தில் தேசிய சிறுபான்மையினர் ஆணையம் தான் முடிவு எடுக்க வேண்டும் எனவும் எனவே மனுதாரர் ஆணையத்தினைத்தான நாட வேண்டும் எனவும் தெரிவித்த நீதிபதிகள் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.