குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி என்றாலும், பிரதமர் என்றாலும் குற்றமிழைத்திருந்தால் தண்டிக்கப்பட வேண்டுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அமுலில் உள்ள சட்டத்தை எவரினாலும் கட்டுப்படுத்துவதற்கு முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி அல்லது பிரதமர் என்றாலும் சட்டம் ஒரேவிதமாகவே அமுல்படுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
தாம் உலகக் கிண்ணப் போட்டியை வெற்றியீட்டிய அணியின் தலைவர் என்ற காரணத்தினால் தவறிழைத்தால் தப்பித்துக்கொள்ள முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குற்றம் இழைத்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் அதில் மாற்றுக் கருத்து கிடையாது எனவும், இதற்காகவே மக்கள் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அதிகாரத்தை வழங்கினார்கள் எனவும் அர்ஜூன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment