உலகம் பிரதான செய்திகள்

ஜமால் கசோக்கி கொலை விசாரணை – டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை


பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலையை விசாரிப்பதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேர்மையாக செயல்படவில்லை என குற்றம் சுமத்தி வெள்ளை மாளிகைக்கு வரமாறு ட்ரம்ப் விடுத்த அழைப்பை ஜமால் கசோக்கியின் காதலி ஹட்டீஜ் ஜெங்கிஸ் நிராகரித்துள்ளார்

டிரம்ப் தன்னை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருப்பது அமெரிக்காவில் அவரை பற்றிய நல்ல எண்ணத்தினை தோற்றுவிப்பதற்கு என தான் எண்ணுவதாகவும் ஹட்டீஜ் ஜெங்கிஸ் தெரிவித்துள்ளார்.  ஜமால் கசோக்கி; 3 வாரங்களுக்கு முன்னர் துருக்கியின் இஸ்தான்புல்லிலுள்ள சவூதி துணை தூதரகத்தில் வைத்து கொல்லப்பட்டிருந்தார்.

சவூதி அரேபியாவை ஆளும் அரச குடும்பத்திற்கும் இந்த கொலைக்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ள சவூதி , கூலிப்படை இந்த கொலையை செய்துள்ள நிலையில் இதுவொரு திட்டமிடப்பட்ட கொலை என தற்போது அந்நாட்டின் அரச வழக்குரைஞர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap