இந்தியா சினிமா பிரதான செய்திகள்

விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :


சர்கார் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க கோரி சென்னையில் அமைந்துள்ள காசி திரையரங்கில் வைக்கப்பட்ட படத்தின் பாரிய சுவரொட்டிகளுக்கு சேதமிழைத்து  அதிமுகவினர்   போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க, விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘சர்கார்’ திரைப்படத்தில் அரசியல் சூழ்நிலையை விவரித்தும், கள்ள ஓட்டு பற்றியும் பேசப்பட்டுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்தயாரித்துள்ளது.

இப்படத்தில் அரசு கொடுக்கும் விலையில்லா பொருட்களை மக்கள் தீவைத்து எரிப்பது போன்ற காட்சிக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. மேலும் அரசியல் தலைவர்களை இழிவுபடுத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வலியுறுத்தி அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதேவேளை சர்கார் படத்தில் இடம் பெறும் சர்ச்சை காட்சிகளை நீக்க கோரி மதுரை, கோவை பகுதிகளிலும் அதிமுகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.  மதுரையில் சர்கார் திரையிடப்படும் சினிபிரியா, மினிபிரியா, சுகப்பிரியா முதலிய திரையரங்குகளின் முன்பாக அதிமுகவினர் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் 2.30 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது. கோவை ரயில் நிலையம் அருகே சாந்தி திரையரங்கு முன்பாகவும் சர்கார் சுவரொட்டிகளை கிழித்து  போராட்டம் நடத்தப்பட்டது.

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • Who ever whatsoever whom they protest this movie. I think those producers as well the hero not bothers at lot. Even the hero Vijay bit of a silent Guy like tortoise made 1000 eggs and kept quite not like our village cocks our foolish fifth standard political folks who ever ruling those mother India as well some extent our Sri Lanka as well. Where as we have to be shame that those fifths standard folks rulles controls even those of our high schoolers like Doctors, Engineers, PHD holders, Scientist, Sociologist, high established Private as well state sector high officials and establishment as a whole. Though I watched this movie Sargar. Yes it’s bit fine tuned movie with high throttle movie taken by Sun pictures DMK faction directed by high acclaimed Director A.R.Murugadoss and music composed by A.R.Rahman and acted by Vijey. It’s so action packed thriller political cum entertaining movie for whole family. Yes Vijay always mastermind of acting such movies to be touch upon whole family such small kids to young girls as well Old folks. There he made this movie as such like. In fact I notice in the Sri Lanka Capital Cinema one of the Old cinema theater still functions in Sri Lanka capital of Colombo nearby Armor street. Where I had been notice such such small eight to ten year boys and young aged teen aged girls enjoying this movie not divert themselves to other even some taken selfie for his dance action over this theater. There he now Vijey got his fans all ages after I sees through our super star Rajinikanth. Well Done Vijey and other co stars and whole team of this Sargar movie. May God bless you all bring the corrupt free of our both countries India and Sri Lankan to be in path of developed world.