இலங்கை பிரதான செய்திகள்

மகிந்தவை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட வேண்டும்..

மகிந்த ராஜபக்ஸவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க முடியாது எனத் தெரிவித்துள்ள நிமல் சிறிபால டி சில்வா அவரை நீக்க வேண்டுமாயின் நம்பிக்கையில்லா பிரேரணை மூலமே அவ்வாறு செய்ய முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார். மகிந்த ராஜபக்ஸ ஏற்பாடு செய்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை எனவும் ஜனாதிபதிக்கே அந்த அதிகாரம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை மகிந்த ராஜபக்ஸ பதவி விலகவுள்ளதாக வெளியாகும் கருத்துக்கள் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ஸ நாளை தமது தரப்பு நாடாளுமன்றத்திற்கு வருகை தரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன் இது நீதிமன்றத்தின் இறுதி முடிவு அல்ல எனவும் தெரிவித்துள்ளார்

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • தேர்தல் ஒன்றின் மூலம் ஜனநாயகரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதமரான திரு. ரணில் விக்கிரமசிங்கவை, எந்தவிதக் காரணமுமின்றித் திரு. மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து தூக்கினார், என்பதோடல்லாமல், வேலிக்குள் இருந்த ஓணானைத் தூக்கி மடிக்குள் வைத்த கதையாகத் திரு. மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி அழகு பார்த்தார்.

    திரு. ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியில் இருந்து தூக்கியபோது அவசியப்படாத நம்பிக்கையில்லாத் தீர்மானம், இப்பொழுது திரு. மகிந்த ராஜபக்ஷவைத் தூக்கும்போது மட்டும் அவசியப்படுகின்றதாம்? எப்படியெல்லாம் நியாயம் அளக்கின்றார்கள்? என்ன இருந்தாலும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே!

    முன்வைத்த காலைப் பின்வைக்காத திரு. மைத்திரிபால சிறிசேன, நாளை என்ன முடிவை எடுப்பாரோ, தெரியவில்லை? ஆனாலும் பதவி துறப்பதாக அவர் சூளுரைத்ததை மக்கள் மறக்கவில்லை. இப்படித்தான் முன்பும், ‘மீண்டும் ஜனாதிபதித் தேர்தலொன்றில் நான் போட்டியிடமாட்டேன்’, என்று கூறியவர், இப்பொழுது அதிலேயே குறியாக இருக்கின்றார். இன்றும் அப்படித்தான் எதையாவது சொல்லி ஜனாதிபதிக் கதிரையை கட்டிப் பிடித்துக்கொண்டிருப்பார், என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காதே? அவர் எதைத்தான் கடைப்பிடித்தார், இதைக் கடைப்பிடிக்க?