அட்லி இயக்கத்திலேயே விஜய் புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். விஜயின் 63 திரைப்படமாக அமையும் இப் படத்தில் நயன்தாராவுடன் இணையவுள்ள நிலையில், தற்போது கதிர் மற்றும் இந்துஜாவும் இணைவுள்ளனர்.
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிப்பதை படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. விவேக், மற்றும் யோகி பாபுவும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில், படத்தில் விஜய்யுடன் இரண்டு இளம் நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். பரியேறும் பெருமாள் படம் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள கதிரும், மேயாத மான், இந்துஜாவும் விஜய்யுடன் இப் புதிய படத்தில் நடிக்கின்றனர்.
விளையாட்டு துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியிலான பாரபட்சம் போன்றவைகள் கதையில் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
Add Comment