உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

உலகில் மிகவும் இளவயது அணித்தலைவராக ஆப்கானின் ரஷீத் கான்


உலகில் மிகவும் இளவயது அணித்தலைவர் என்ற பெருமையை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் பெற்றுள்ளார். ஏற்கனவே இவர் ஐசிசி விருது பெற்றுள்ள இவர் இளம் வயதில் ஐசிசி விருது வாங்கிய ஒரே ஆப்கானிஸ்தான் வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்தும் இவர் சராசரியாக போட்டிக்கு 3.8 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். 2017ம் வருடத்தில் இவருடைய சராசரியே ஏனைய வீரர்களை விட அதிகம் ஆகும். ஐபிஎல் சார்பாக ரஷீத் கானை தற்போது மீண்டும் ஹைதராபாத் அணி 9 கோடி கொடுத்து எடுத்துள்ளது. சர்வதேச இருபதுக்கு இருபது பந்துவீச்சு தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளார்.

ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவர் இருபதுக்கு இருபது பந்துவீச்சு தரவரிசையில்; முதல் இடத்தில் வருவது இதுவே முதல் முறை என்கின்ற நிலையில் தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.