இலங்கை பிரதான செய்திகள்

பரந்தனில் விபத்து நால்வர் வைத்தியசாலையில்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது . வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து அதி வேகத்தினால் இடம்பெற்றுள்ளது என  காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் அத்துடன் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.