இலங்கை பிரதான செய்திகள்

3ஆம் இணைப்பு – யாழ். மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் ( வாக்கெடுப்பு குறித்த முழுவிபரம் )

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.மாநகர சபை முதல்வர் தெரிவில் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவாகி யாழ்.மாநகர முதல்வராக தெரிவு செய்யபட்டு உள்ளார்.  யாழ்.மாநகர சபையின் சபை அமர்வுகள் இன்றையதினம் திங்கட்கிழமை காலை உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிறைஞ்சன் தலைமையில் கூடியது.

 
உறுப்பினர் ஒருவர் கலந்து கொள்ளவில்லை. 
அதன் போது சபை அமர்வில் தெரிவு செய்யபட்ட 45 உறுப்பினர்களில் 44 உறுப்பினர்கள் அமர்வில் கலந்து கொண்டனர். உதய சூரியன் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய சுதர்சிங் விஜயகாந்த் அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
முதல்வர் தெரிவு. 
யாழ்.மாநகர சபை முதவர் தெரிவுக்கு உறுப்பினர்களின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. தமிழரசு கட்சி சார்பில் இமானுவேல் ஆர்னோல்டும் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பில் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முடியப்பு ரெமிடீயஸ்சும் முதல்வராக  பிரேரிக்கப்பட்டனர்.  அதனை அடுத்து ஆணையாளர் வாக்கெடுப்பின் மூலம் முதல்வர் தெரிவு செய்யப்படுவார் என அறிவித்தார். அதனை அடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்தவதா ? பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா ? என உறுப்பினர்கள் இடையில் சர்ச்சை எழுந்தது.
வாக்கெடுப்பு. 
அதனை அடுத்து முதல்வர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இரகசிய வாக்கெடுப்பா ? பகிரங்க வாக்கெடுப்பா? என வாக்கெடுப்பு நடாத்தப்படும் என ஆணையாளர் அறிவித்து அதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.  அதன் போது 44 உறுப்பினர்களில்  இரகசிய வாக்கெடுப்பு என 25  உறுப்பினர்களும் , பகிரங்க வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என 19 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
முதல்வருக்கான வாக்கெடுப்பு. 
அதனை அடுத்து முதல்வராக பிரேரிக்கப்பட்ட இமானுவேல் ஆர்னோல்ட் , விஸ்வலிங்கம் மணிவண்ணன் , மற்றும் முடியப்பு ரெமிடியஸ் ஆகியோருக்கான வாக்கெடுப்பு நடைபெற்றது.  வாக்கெடுப்பில் இமானுவேல் ஆர்னோல்ட் 18 வாக்குகளையும் , விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் முடியப்பு ரெமிடியஸ் ஆகியோர் தலா 13 வாக்குகளை பெற்றனர்.  வாக்கெடுப்பில் எவரும் அறுதி பெரும்பான்மை எடுக்காததால் இருவருக்கு இடையில் வாக்கெடுப்பு நடாத்தப்படும் என ஆணையாளர் அறிவித்தார்.
 
 திருவுள சீட்டெடுப்பு
விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் முடியப்பு ரெமிடியஸ் ஆகியோர் தலா 13 வாக்குகளை பெற்றமையால் அவர்களில் ஒருவரை திருவுள சீட்டெடுப்பு மூலம் நீக்கப்படுவார்கள் என அறிவித்தார்.  அதனை அடுத்து திருவுள சீட்டெடுப்பு நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சீட்டினை எடுக்க யாராவது ஒரு உறுப்பினரை முன் வருமாறும் , சீட்டெடுப்பில் எவரது பெயர் சீட்டில் உள்ளதோ அவர் போட்டியில் இருந்து நீக்கப்படுவார் என ஆணையாளர் அறிவித்தார்.
மணிவண்ணன் நீக்கம். 
அதையடுத்து சீட்டினை எடுக்க போட்டியாளர்களில் ஒருவரான முடியப்பு ரெமிடியஸ் முன் வந்தார். அவர் சீட்டினை எடுப்பதற்கு ஆட்சேபனை இருக்கின்றதா என ஆணையாளர் உறுப்பினர்களிடம் கேட்டார் எவரும் ஆட்சேபனை தெரிவிக்காததை அடுத்து சீட்டினை ரெமிடியஸ் எடுத்தார். அதில் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் பெயர் எழுதப்பட்டு இருந்தது. அதனால் மணிவண்ணன் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார் .
அதனை தொடர்ந்து மீண்டும் யார் முதல்வர் என ஆர்னோல்ட் மற்றும் ரெமிடியஸ் இடையில் வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இடைவேளை. 
அதன் போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் அடுத்த வாக்கெடுப்பு தொடர்பில் நாம் உறுப்பினர்களுக்கு இடையில் கலந்தாலோசிக்க வேண்டும் எனவே இடைவேளை வேண்டும் என ஆணையாளரிடம் கோரினார்கள்.
இடைவேளைக்கு கணக்கெடுப்பு. 
அதற்கு தமிழரசு கட்சியினர் இடைவேளை வேண்டாம் என்றனர். அதனால் இடைவேளை வேண்டுமா ? வேண்டாமா ? என உறுப்பினர்களிடம் கேட்டு பெரும்பான்மை முடிவினை அடுத்தே தீர்மானிக்க முடியும் என ஆணையாளர் தெரிவித்தார்.
அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் இடைவேளை வேண்டும் என கோரியதை அடுத்து அவர்களுக்கு 10 நிமிட இடைவேளை வழங்க ஆணையாளர் சம்மதித்ததுடன் உறுப்பினர்களை சபா மண்டபத்திற்கு வெளியில் செல்ல வேண்டாம் என கோரினார்.
ரெமிடியஸ் போட்டியில் இருந்து வாபஸ். 
பின்னர் 10 நிமிட இடைவேளை முடிவடைந்த பின்னர் ஆணையாளர் மீண்டும் சபையை கூட்டி வாக்கெடுப்புக்கு தயாரான போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த முடியப்பு ரெமிடியஸ் தான் முதல்வர் போட்டியில் போட்டியிட வில்லை என ஆணையாளருக்கு அறிவித்து போட்டியில் இருந்து வாபஸ் பெற்றார்.
ஆர்னோல்ட் தெரிவு. 
அதனால் இமானுவேல் ஆர்னோல்ட் யாழ்.மாநகர சபை முதல்வராக தெரிவானார். அதை அடுத்து முதல்வருக்கு உரிய ஆடை அணிந்தது முதல்வர் கதிரையில் ஆர்னோல்ட் அமர்ந்து முதல்வராக பொறுப்பெடுத்தார்.
அதனை அடுத்து ஆர்னோல்ட் தலைமையில் சபை ஆரம்பமானது. அடுத்து துணை முதல்வர் தெரிவு அறிவிக்கப்பட்டது. தமிழரசு கட்சி சார்பில் துணை முதல்வராக துரைராசா ஈசன் பிரேரிக்கப்பட்டார்.
துணை முதல்வர் ஈசன். 
மற்றைய கட்சிகள் எவரையும் பிரேரிக்காதமையால் துரைராசா ஈசன் போட்டியின்றி துணை முதல்வராக தெரிவானார்.
சபை ஒத்திவைப்பு. 
அதனை அடுத்து சபை அமர்வினை யாழ்.மாநகர முதல்வர் ஆர்னோல்ட் ஒத்திவைத்தார். அடுத்த சபை அமர்வுகள் தொடர்பிலான தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
   
2ஆம் இணைப்பு – யாழ். மாநகர சபை மேயராக இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவானார்..
Mar 26, 2018 @ 05:34

யாழ். மாநகர சபை மேயராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட  இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

முதல் வாக்கெடுப்பில் முன்னிலைப் பெற்ற ஆர்னோல்டுக்கும், ஈ.பி.டி.பி.-யின் ரெமிடியர்ஸிற்கும் இடையே இரண்டாவது வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்த நிலையில், மேயர் பதவிக்கான போட்டியிலிருந்து விலகுவதாக ரெமிடியர்ஸ் அறிவித்த நிலையில்,  மாநகர சபை மேயராக ஆர்னோல்ட் தெரிவுசெய்யப்பட்டார்.

தொடர்ந்து இடம்பெற்ற பிரதி மேயர் தெரிவிற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது.  அதில் துரைராசா ஈசன் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டார்.

இந்த நிலையில்  யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு நிறைவுபெற்றதுடன், அடுத்த அமர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும்  என  மேயராக தெரிவுசெய்யப்பட்ட ஆர்னோல்ட்  குறிப்பிட்டுள்ளார்.

ஆர்னோல்ட் – மணிவண்ணன் – றெமீடியஸ் – யார் மேயர்? – இரகசிய வாக்கெடுப்பு –

யாழ். மாநகர சபை மேயரைத் தெரிவு செய்வதற்காக இரகசிய வாக்கெடுப்பு   நடைபெறுகிறது. தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்டும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் மணிவண்ணனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் றெமீடியஸும் மேயர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள நிலையிலேயே இரகசிய வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்று வருகின்றது.

இரகசிய வாக்கெடுப்பு நடத்துவத இல்லை பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதா என்று வாக்கெடுப்பு நடத்தியபோது 25 பேர் இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில் 19 பேர் பகிரங்க வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.