பிரதான செய்திகள்

சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்களுக்கு எதிராக முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் பிரதமர் ரணில்விக்ரமசிங்க இந்த யோசனையை வாபஸ் பெற்றுக் கொள்ளுமாறு பணிப்புரை விடுத்திருந்தார், இதன் அடிப்படையில் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

எனினும், தற்பொழுது சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு கட்சியின் பின் வரிசை உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக ரஹ்மான் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியதன் பின்னர் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கும் தினம் பற்றி தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.