இந்தியா பிரதான செய்திகள்

தஞ்சை அருகே இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த 5பேர் உயிரிழப்பு


தஞ்சை அருகே பட்டுக்கோட்டையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தி மீது  கார் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவாகள் ஒரே குடும்ப்பதினைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் காயமடைந்த 2 பேர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்கள், தஞ்சையை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.