உலகம் பிரதான செய்திகள் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் – ரபெல் நடால், சிமோனா ஹாலெப் காலிறுதிக்கு முன்னேற்றம்


ரோம் நகரில் நடைபெற்று வரும் இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால், சிமோனா ஹாலெப் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியொன்றில் எஸ்தோனியாவின் அனெட் கோன்டாவீட் 6-2, 7-6 (3) என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸை தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார். பிரெஞ்ச் ஓபன் சம்பியனான லாத்வியாவின் ஜெலினா அஸ்டாபென்கோ இங்கிலாந்தின் ஜோஹன்னா கோன்டாவை 2-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றுள்ளார்.

அதேவேளை ருமேனியாவின் சிமோனா ஹாலெப்புடன் விளையாடவிருந்த அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸ் உபாதை காரணமாக விளையாடாமையினால் சிமோனா விளையாடாமலேயே கால்இறுதிக்கு சென்றுள்ளார்.

ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் ரபெல் நடால் 6-4, 6-1 என்ற நேர் செட்டில் கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை தோற்கடித்து கால்இறுதிக்குள் சென்றுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.