குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்ன் பிரதமர் மரியன்னோ ராஜோய் ( Mariano Rajoy )க்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஸ்பெய்ன் பிரதமருக்கு எதிராக இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நாடாளுமன்றில் நடத்தப்பட உள்ளது.எதிர்க்கட்சியான சோசலிச கட்சி பிரதமரை பதவி கவிழப்பதற்கான தீவிர முனைப்புக்களில் ஈடுபட்டுள்ளது. பிரதமருக்கு நெருக்கமானவர்கள் பாரியளவில் லஞ்ச ஊழல் மோசடிகளில்
ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலும் ஸ்பெய்ன் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட போதிலும் அதனை அவர் தோற்கடித்திருந்தார். இந்தநிலையில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் சோசலிச கட்சியினால் வெற்றியீட்ட முடியுமா என்பது சந்தேகமே எனத்தெரிவி;க்கப்படுகிறது.
Spread the love
Add Comment