குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையும் மாநகர சபை உறுப்பினருமான ரஞ்சன் டி சில்வாவை சுட்டுக்கொன்ற பாதாள உலகக் குழுவின் மூன்று உறுப்பினர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த பாதாள உலகக்குழுவை சேர்ந்த மேலும் மூன்று பேர் வேறு குற்றங்களுக்காக சிறையில் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கொலையை கொனாகோவில் அஞ்சு என்ற நபர் தலைமையில் இயங்கும் பாதாள உலகக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர். கொலையுடன் இந்த குழுவைச் சேர்ந்த ஆறு பேர் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
ரஞ்சன் டி சில்வாவை கொலை செய்ய சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி வரும் காவற்துறையினர் சந்தேக நபர்களை தேடி அவர்களின் வீடுகளுக்கு சென்று தேடுதல் நடத்திய போதே அவர்கள் நாட்டில் இருந்து தப்பிச் சென்றமை தெரியவந்துள்ளது.
Add Comment