குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அண்மையில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் கிளைமோர், உட்பட விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மீட்ட சம்பவத்தில் சிறப்பாக செயற்பட்ட 12 காவல்துறை அதிகாரிகள் வட மாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபரினால் கௌரவிக்கப்பட்டுள்ளனனர்.
இந் நிகழ்வு இன்று(29) பிற்பகல் இரண்டு மணியளவில் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
இதன்போது அண்மையில் ஒட்டுசுட்டான் பகுதியில் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் அதனுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்ட நடவடிக்கைகளில் சிறப்பாக ஈடுபட்டவர்கள் என தெரிவித்து மாங்குளம், ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தர்கள் பன்னிரண்டு பேர் வடமாகான சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபரால் கௌரவிக்கப்பட்டனர்.
வடமாகான சிரேஸ்ட பிரதி காவல்துறைமா அதிபர் மற்றும் வடமாகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களையும் சேர்ந்த பிரதி காவல்துறைமா அதிபர்கள், காவல்துறை அத்தியட்சகர்கள், உதவி காவல்துறை அத்தியட்சகர்கள், காவல்துறை பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வினை தொடர்ந்து காவல்துறை உயர் மட்ட குழுவினரின் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
Add Comment