இலங்கை பிரதான செய்திகள்

“ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் எனக்கு தமிழர்களும், முஸ்லீம்களும் வாக்களிப்பர்”

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில்போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கூறினால் தேர்தலில் களமிறங்குவேன் என்றும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரர் பசில் ராஜபக்ச தேர்தலில் போட்டியிட மறுப்புத் தெரிவித்துள்ளதுடன் சிறிலங்காவின் ஜனாதிபதியும் சகோதரருமான மகிந்த ராஜபக்ச நிறுத்தினால், தான் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் கூறினார்.

தமிழ் பேசும் மக்களும் கூட இந்தமுறை தனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று நம்புவதாகவும் கோத்தபாய கூறியுள்ளார். தான் பொது பலசேனாவின் ஆதரவாளர் என்ற தவறான கருத்து இப்போது பொய்யாகியுள்ளதாகவும் அதனால் தனக்கு முஸ்லிம்களும் வாக்களிப்பார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவுக்காக தமிழ் மக்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்றும் தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், ஒவ்வொரு குடிமகனும், அமைதியாகவும், கௌரவமாகவும் வாழுகின்ற நிலையை உறுதி செய்வேன் என்றும் தெரிவித்தார்.

தமிழர்கள் கவலைப்பட வேண்டியதில்லை எனவும் ஏனென்றால், மகிந்த ராஜபக்ச தனது குடும்ப வட்டத்துக்குள் தமிழ் உறவுகளைக் கொண்டிருப்பதாகவும் போர் முடிவுக்கு வந்த பின்னர் அவர் வடக்கு, கிழக்கில் முக்கியமான அபிவிருத்திப் பணிகளை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் கோத்தபாய மேலும் தெரிவித்தார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.