உலகம் பிரதான செய்திகள்

லண்டனில் அடுக்குமாடிக்குடியிருப்பில் தீவிபத்து – 50-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்(படங்கள்)


மேற்கு லண்டனில் உள்ள ஹம்ப்ஸ்ரெட்   ( Hampstead ) பகுதியிலுள்ள 5 மாடி அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தினையடுத்து அந்த குடியிருப்பில் வசித்த பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதுடன் குடியிருப்பில் வசித்த 50-க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர்.

;நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் குறித்த நேரத்தில் மக்கள் வெளியேற்றப்பட்டதால், யாருக்கும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 4-வது மாடியில் பற்றிய தீ ஏனைய தளங்களுக்கும் பரவியிருக்கலாம் என தெரியவந்துள்ள தீயணைப்பு துறையினர் மேல் தளம் சேதமடைந்து, கூரை இடிந்து விழும் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.