பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள குழு உறுப்பினர் ஒருவர் கொலன்னாவ பகுதியில் வாள் ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹெவா தந்ரகே சிசிர குமார எனப்படும் ´பொடி விஜே´ நேற்று (06.08.18) இரவு 8 மணியளவில் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் வெல்லம்பிடிய பொலிஸாரிடம் 31.5 அங்குல வாள் ஒன்றுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர் கொலை சம்பவம் ஒன்று தொடர்பில் 12 வருட சிறைவாசம் அனுபவித்துள்ளதுடன், 2001ஆம் ஆண்டில் கைக் குண்டு ஒன்றுடன் கைதானவர் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love
Add Comment