பிரதான செய்திகள் விளையாட்டு

ஆசிய கிண்ண கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் இன்று மீண்டும் போட்டி :


ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீண்டும் போட்டியிடவுள்ளன. 6 நாடுகள் போட்டியிடும் இந்தப் போட்டியில் லீக் போட்களின் முடிவில் ஏபிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளும், பி பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் அணிகளும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தன. இந்தநிலையில் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பங்களாNசை வென்றிருந்தது. அடுத்து போட்டியில் பாகிஸ்தான் 3 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வென்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்றின் 3-வது போட்டி துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ளது.  இரு அணிகளும் போட்டியிடும் 131-வது போட்டி இதுவாகும். இதுவரை நடந்த 130 போட்டிகளில் இந்தியா 53 போட்டிகளிலும் பாகிஸ்தான் 73 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.