இலங்கை பிரதான செய்திகள்

ரவி கருணாநாயக்க – தயாசிறி ஜெயசேகர ஆகியோருக்கு மீண்டும் அமைச்சு?


ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்பியுள்ள நிலையில், அரசியலில் சில அதிரடி முடிவுகளை மேற்கொள்ளவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவையில் மாற்றம் இடம்பெறுவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை நிதி அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஓய்வுபெறுவதால், அவரது பதவிக்கு ஜனாதிபதி வேறொருவரை நியமிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சரவை மாற்றத்தின் முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க மற்றும் தயாசிறி ஜெயசேகர ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடிப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.