சினிமா பிரதான செய்திகள்

எல்.கே.ஜி. திரைப்படத்திற்கு அ.தி.மு.க. எதிர்ப்பு :


ஆர்.ஜே.பாலாஜி – பிரியா ஆனந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் எல்.கே.ஜி. திரைப்படத்தின் சுவரொட்டி குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அத் திரைப்படத்திற்கு அ.தி.மு.க.வி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

நடப்பு அரசியலை கிண்டல் செய்து உருவாகும் இந்த படத்தில் அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். பிரபு இயக்கியுள்ள இத் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து பின்னணி நடைபெற்று வரும் நிலையில், படத்தில் இருந்து முதல் பாடல் குறித்த அறிவிப்பை படக்குழு நேற்று வெளியிட்டது.

தரமான சம்பவம் 1 என்று குறிப்பிட்டு ஆர்.ஜே. பாலாஜி சுவரொட்டி ஒன்றை நேற்று வெளியிட்டார். இச் சுவரொட்டியில் இடம் பெற்றுள்ள படம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை நினைவுபடுத்துவது போல் அமைந்ததால் அ.தி.மு.க. வினர் மத்தியில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகி பிரவீன் குமார் டுவிட்டரில் ‘எல்.கே.ஜி’ படம் ரிலீசானால் பாலாஜியின் படத்திற்கு செருப்பு அபிஷேகம் பண்ணப்போவதாக தெரிவித்தார். இதற்கு பின்னூட்டம் இட்டுள்ள ஆர்.ஜே. பாலாஜி ’இதுவரைக்கும் பண்ணாத மாதிரி அண்டா அண்டாவாக செருப்பு அபிஷேகம் செய்யுங்கள்’ என பதில் கூறியுள்ளார்.

லியோன் ஜேம்ஸ் இசையில் முதல் பாடல் குடியரசு தினத்தன்று வெளியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap