இலங்கை பிரதான செய்திகள்

காணி அளவீடு கைவிடப்பட்டது…

வலி.வடக்கில் கடற்படை முகாமுக்காக 252 ஏக்கர் காணியை சுவீகரிப்பதறக்கான அளவீடுகள் நாளை 22ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அந்தப் பணி கைவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாநாயக்க ஆகியோரால் இன்று காலை தனக்கு அறிவிக்கப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

252 ஏக்கரில் பெரியளவிலான கடற்படை முகாமை அமைப்பதற்காக ஜே/226 பகுதி நகுலேஸ்வரம் தொடர்புபட்ட நிலங்களையும் சுவீகரிக்க நாளை 22ஆம் திகதி அளவீடு செய்யப்படும் என நில அளவைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

தமக்கு பிரதமரால் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி இந்த காணி சுவீகரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்த நிலையில் நாளை நடைபெறவிருந்த காணி அளவீட்டுப் பணி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க மற்றும் பிரதமர் அலுவலகத்தால் இன்று காலை தமக்கு அறிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

1 Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

  • ஜெனிவாவில் நடத்திய துரோகத்தனத்தை இது போன்றதொரு செயற்பாட்டால்
    மறைக்க முயல்வது, சூரியனைக் கைகளால் மறைக்க
    முயலுவதற்கு ஒப்பானது.

    இந்தச் செயற்பாட்டால், TNA யினர் வெற்றிக் களிப்படையலாம்.
    ஆனால் மக்கள் முட்டாள்கள் அல்லர்.