இலங்கை பிரதான செய்திகள்

வந்தாறுமூலையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலி


மட்டக்களப்பு வந்தாறுமூலை சந்தைக்கு அருகில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் இரண்டு மோட்டர் சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்ததில் மூவர் உயிரிழந்துள்ளனர்.  குறித்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் வந்தாறுமூலையைச் சேர்ந்த 22 வயதுடைய மோகன் மயூரன், 23 வயதுடைய முருகுப்பிள்ளை பவித்திரன் ஆகியோர் இவ்வாறு உயிரிழந்ததுடன் உயிரிழந்த மற்றையவர் அடையாளம் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி 4 பேர் இரண்டு மோட்டார் சைக்கிள்களை சமாந்தரமாக ஓட்டிச் சென்று கொண்டிருந்த போது இரு மோட்டர் சைக்கிள்களும் விபத்துக்கள்ளான நிலையில் பின்னால் வந்த மோட்டர் சைக்கிளும் அதன் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் இரு மோட்டர்சைக்கிள்கள் தீப்பற்றி எரிந்ததில் அதில் ஒருவர் தீப்பற்றி உயிரிழந்துள்ளதுடன் ஏனைய இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.