ஜெனிவா மனித உரிமைகள் பேரவை குரைக்கும் நாயே தவிர கடிக்கும் நாயல்ல. ஆகவே சர்வதேச நீதிமன்றத்தை அமையுங்கள் என வலியுறுத்துவை கண்டு அரசாங்கம் அஞ்சிவிடத் தேவையில்லை என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழர் தரப்பின் அச்சுறுத்தலை கண்டும் அஞ்சிவிட வேண்டாம் என்றும் சர்வதேச நீதிமன்றத்தை அமைக்கக்கோரும் தமிழர் தரப்பின் கோரிக்கை இறுதிவரை கனவாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை யுத்தத்தின் பின்னர் வடக்கில் பத்து ஆண்டுகளாக இராணுவ முகாம்களுக்குள் சிக்கியுள்ள ஆலயங்களை அம்மக்களுக்கு வழிபட இடமளிக்க வேண்டும் என்பதுடன் தமிழ் மக்களின் காணிகளை உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்தன சபையில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மொரகாகந்த நீர்தேக்கத்தின் மூலமாக வடக்குக்கு நீரை கொண்டுசென்றால் வடக்கு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment