இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

அவிசாவளையில் பேருந்து விபத்து – 06 பேர் காயம்


ருவான்வெல்ல காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட அவிசாவளை – கேகாலை பிரதான வீதியின் கரவனெல்ல பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 06 பேர் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக ருவான்வெல்ல காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று (11.04.2019 )காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ருவான்வெல்லையிலிருந்து அவிசாவளையில் அமைந்துள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றுக்கு தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு பயணித்த போது வீதியை விட்டு விலகி குடைசாய்ந்ததினால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

விபத்தில் பேருந்து சாரதி உட்பட 06 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பியுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ருவான்வெல்ல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.