பிரபல தீவிர மதப் போதகரான சாகிர் நாயக்கின் பீஸ் ரீவி (peacetv) என்ற கேபிள் தொலைக்காட்சி அலைவரிசையை நிறுத்துவதற்கு டயலொக், டெலிகொம் நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அதற்கமைய நேற்று (30) ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இந்த கேபள் தொலைக்காட்சி அலைவரிசை நிறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த பீஸ் டிவி அலைவரிசையானது மத தீவிரவாதத்தை கற்பித்தல், அடிப்படைவாதத்தை பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அலைவரிசையின் உரிமையாளர் வைத்தியரான சாகிர் அப்துல் கரீம் நைக் என்ற பிரபல தீவிரவாத மத போதனையாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#peacetv #banned #dialogue #telecom #ZakirNaik
Add Comment