இந்தியா பிரதான செய்திகள்

59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 37,870 கோடி வழங்க ஒப்புதல்


59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் இதுவரையில் 37,870 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறு  –  நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும் விதமாக 59 நிமிடத்தில் கடன் வழங்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு நவம்பரில் ஆரம்பித்து வைத்திருந்தார். தொழில் கடன்கள் பெறுவதற்கு மாதக் கணக்கில் வங்கிகளுக்கு அலைய வேண்டிய சூழல் இருக்கும் நிலையில், 59 நிமிடத்தில் கடனை உறுதி செய்யும் இத்திட்டமானது தொழில் துறையினரிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.

இந்தநிலையில் கடன் தொகையை அதிகரிப்பதற்கான மதிப்பாய்வு கூட்டத்தை நிதித் துறை அதிகாரிகளுடன் பிரதமர் அலுவலகம் மேற்கொண்டதில் கடந்த மார்ச் 31 ம் திகதி வரையில் 37,870  கோடி கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள் அதிகாரி ஒருவர் ஐஏஎன்எஸ் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார். தற்போது இத்திட்டத்தின் கீழ் 1 கோடி ரூபா வரையில் வழங்கப்படும் கடனை படிப்படியாக 3 முதல் 5 கோடி ரூபா வரை உயர்த்தவும் நிதி அமைச்சகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இத்திட்டத்தின் பயன்கள் மற்றும் பாதகங்கள் குறித்து ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சும் ஆலோசனை நடத்தியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் ஐஏஎன்எஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

#loan #narenthiramodi #business

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.