இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் ஐ.எஸ் அமைப்பு நேரடியாகத் தொடர்புபடவில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத புலனாய்வு அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் உள்ளூர் குழுவினரால் மாத்திரமே, திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை விசாரணையாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
தற்கொலைக் குண்டுதாரிகளின் காணொளி ஐ.எஸ் அமைப்புக்கு, இந்தோனேசியா வழியாகவே அனுப்பப்பட்டுள்ளதென்றும் அதனையே அவர்கள் ஊடகங்களுக்கு வெளியிட்டனரென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல்- பக்தாதி இலங்கை தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருந்தார். எனினும் தாக்குதலில் ஈடுபட்ட உள்ளூர் குழு, அல்- பக்தாதியின் தலைமையில் செயற்பட்டிருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், ஐ.எஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சிலருடன் அவர்கள் சில வழிகளில் தொடர்பு கொண்டிருக்கலாமேயன்றி, தாக்குதல் நடத்தியவர்கள் ஐ.எஸ். அமைப்பு உறுப்பினர்களல்ல என்றும் அந்தப் புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார். #AbuBakralBaghdadi #eastersundayattacklk
Add Comment