இலங்கை பிரதான செய்திகள்

மாகாணசபைத் தேர்தலில் சிக்கல் – ஜனாதிபதியை தேர்தல் அதிகாரிகள் சந்திக்க உள்ளனர்.


மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த வாரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திக்க உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தற்போதைக்குத் தேர்தலில் இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதோ அல்லது வேறு மாற்றங்களைச் செய்வதோ சாத்தியமற்றது. இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் சிவில் அமைப்புகளுடன் உரையாடல்களை தொடரவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, இது சாத்தியமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலை ஒக்டோபர் 8 ஆம் திகதியளவில் நடத்த முடியுமென்றும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக எல்லைநிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்பதனால் புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சட்டபூர்வ சிக்கல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தேர்தல்களை நடத்த விரும்பினால் பாராளுமன்றம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் புதிய சட்டத்தை ரத்து செய்து முந்தைய சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மஹிந்த தேசப்பிரிய வலியுறுத்தி உள்ளார். #மாகாணசபைத்தேர்தல் #மைத்ரிபாலசிறிசேன #மஹிந்ததேசப்பிரிய

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.