உலகம் பிரதான செய்திகள்

ஈரானில் கடுமையான நிலநடுக்கம் – 5 பேர் பலி

ஈரானில் இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 5.9 அளவில் ஏற்பட்ட கடு:மையான நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள அசெர்பைஜான் மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்திதனால் அப்பகுதியில் இருந்த வீடுகள் கட்டிடங்கள் குலுங்கியதுடன் சில கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.

பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 120 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

கடந்த 2003ம் ஆண்டு ஈரான் நாட்டின் பாம் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 26,000 மக்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ஈரான் #நிலநடுக்கம்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.