மொனராகலை, இத்தேகட்டுவ பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொலை சம்பத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக காவல்துறையினர் விசேட தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட போது, சந்தேக நபர் காவல்துறையினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் இதனையடுத்து, பரஸ்பரம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர், மொனராகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 31 வயதுடைய நபர் எனவும் கடந்த 31ஆம் திகதி மொனராகலை பிரதேசத்தில் நபரொருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்திருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #மொனராகலை #காவல்துறையினர் #துப்பாக்கி
Add Comment