இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

டிக்கோயா ஆற்றில் ஆணின் சடலம் மீட்பு

(க.கிஷாந்தன்)

ஹட்டன் காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேகத்திற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா டிக்கோயா ஆற்றில் இன்று  மதியம் 2 மணியளவில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டதாக ஹட்டன் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட ஆண் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரிழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது எவராவது கொலை செய்து ஆற்றில் எறிந்து சென்றார்களா என பலகோணங்களில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை.

சடலமாக மீட்கப்பட்ட நபா் 35 -40 ற்கு இடைப்பட்ட வயது மதிக்கதக்கவர் என 4 காவல்துறையினாின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஹட்டன் காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர். #டிக்கோயா #ஆணின் #சடலம் #மீட்பு #காசல்ரீ

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.