இலங்கை பிரதான செய்திகள்

கோட்டாபயவைச் சந்தித்தார் பொம்பியோ!இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவைச் சந்தித்துள்ளார்.

நேற்று (27.10.20) இரவு 7.35 மணியளவில் இலங்கை சென்றடைந்த அமெரிக்க ராஜாங்க செயலாளர் உட்பட.ட குழுவினரை வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி உட்பட அமெரிக்க தூதவர அதிகாரிகள் வரவேற்றிருந்தனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான இரு தரப்பு கலந்துரையாடலை அடுத்து அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் இணைந்து விஷேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் ஈடுபடவுள்ளார்.

இதனையடுத்து அவர் கொச்சிக்கடை தேவாலயத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் தனது விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க ராஜாங்க செயலாளர் மாலைத்தீவு நோக்கி பயணிக்கவுள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.