இலங்கை பிரதான செய்திகள்

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுப்பு!

தென்மராட்சி கடல் நீரேரி பெருக்கெடுத்துள்ளமையால் நீரேரியை அண்டிய பகுதிகளில் வசித்த மக்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி சனசமூக நிலைய கட்டடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். 


கடல் சில தினங்களாக ஊர்காவற்துறை , நாவாந்துறை , பூநகரி கடல் பெருக்கெடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது தென்மராட்சி கடல் நீரேரியும் பெருக்கெடுத்துள்ளது. 
அதனால் கடல் நீரேரியை அண்டிய பகுதிகளில் தற்காலிக வீடுகளில் வசித்த குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி சன சமூக நிலைய கட்டடங்களில் தங்கியுள்ளனர். 

அதேவேளை , தென்மராட்சி, தனங்களப்பு பகுதியில் 20 வயற்காணிகளான சுமார் 6 ஏக்கர் வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்துள்ளது. இதனால் 6 ஏக்கர் நெற் செய்கை முற்றாக பாதிப்படைந்துள்ளது. 


வயற்காணிக்குள் கடல் நீர் உட்புகுந்தமையால் , இனிவரும் காலங்களிலும் நெற்செய்கை செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்கையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். #பெருக்கெடுப்பு #தென்மராட்சி #கடல்நீரேரி #ஊர்காவற்துறை #நாவாந்துறை #பூநகரி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap