பிரதான செய்திகள் விளையாட்டு

லங்கா பிரிமியர் லீக் – கொழும்பு கிங்ஸ் வெற்றி

நேற்றைய தினம் மிகவும் கோலாகலமாக ஹம்பாந்தோட்டை, சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமானத லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடாின் முதலாவது போட்டியில் சூப்பர் ஓவரில் கொழும்பு கிங்ஸ் அணி 5 ஓட்டங்களால் வெற்றி பெற்று தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

கண்டி டஸ்கர்ஸ் மற்றும் கொழும்பு கிங்ஸ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கண்டி டஸ்கர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 03 விக்கெட்டுக்களை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இதனையடுத்து 220 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொழும்பு கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 219 ஓட்டங்ளை பெற்றதனால் போட்டி சமநிலையில் முடிந்தது.

இதனையடுத்து வெற்றியைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவர் வழங்கப்பட்டு அதன்மூலம் கொழும்பு கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது #லங்காபிரிமியர்லீக் #கொழும்புகிங்ஸ் #வெற்றி #கண்டிடஸ்கர்ஸ்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.