உலகம்

மாலைதீவு அருகே, 85 இலங்கை அகதிகளை, அமெரிக்க கடற்படை படகுடன் பிடித்தது?

தலா 50லட்சங்கள் முகவர் குழுவுக்கு வழங்கப்பட்டது?

இந்து சமுத்திரத்தில் தத்தளித்த படகு ஒன்றில் இருந்து 85 இலங்கை அகதிகளை அமெரிக்கக் கடற்படையினர்தடுத்துப் பிடித்துள்ளனர் எனத் தகவல்வெளியாகி உள்ளது.

அவர்களில் தமிழ் நாடு அகதி முகாம்களில் இருந்து தப்பிய 59 ஈழ அகதிகளும அடங்குவர் என்ற தகவலை’ரைம்ஸ் ஒவ்இந்தியா’ செய்தி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

கனடா செல்வதற்காக கேரளாவில் இருந்து முதலில் ஆபிரிக்கா நோக்கிப் பயணமாகிய வழியிலேயே இவர்கள் மாலைதீவுக்கும் மொறீசியஸுக்கும் இடையேசிக்கியுள்ளனர் என்று தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்து சமுத்திரத்தில் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் உள்ள டியாக்கோ ஹார்சியா(island of Diego Garcia) தீவில் நிலைகொண்டு இயங்கும் அமெரிக்கக் கடற்படைப்பிரிவே அகதிகள் படகை வழிமறித்தது என்று தெரிவிக்கப்படுகிறது.

மோசமான காலநிலை மற்றும் கடற்கொந்தளிப்பில் சிக்கித்தத்தளித்து நின்ற அந்தப் படகில் இருந்து மீட்கப்பட்ட அகதிகள் அனைவரும் மாலைதீவு பொலீஸாரிடம்கையளிக்கப்பட்டுள்ளனர் என்றும் உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அவர்கள் அனைவரினதும் சரியான அடையாளங்கள் தெரியவரவில்லை என்றும் கூறப்படுகிறது.அனைவரும் இலங்கையர்களா அல்லது வேறு நாட் டவர்களும் உள்ளனரா என்பது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை- என்று இந்திய ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள 59 ஈழ அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள 65 ஆயிரம் பேரில் 59 பேர் கடந்த செப்ரெம்பர் மாதத் தொடக்கத்தில் காணாமற் போயிருந்தனர் என்று கூறியுள்ளகாவற்துறையினர், அவர்கள் கேரளா சென்று அங்கிருந்து தலா50 லட்சம் ரூபா செலவில் சட்டவிரோத படகுப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என்றும் அனைவரையும் பாதுகாப்பாகக் கனடாவுக்கு அழைத்துச் செல்வதாகப் பயண முகவர் குழு ஒன்று வாக்குறுதி அளித்திருந்தது என்றும் தங்களுக்குத் தகவல் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

படகுப் பயணிகள் தங்களிடம் கையளிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற தகவலை மாலைதீவு அரசாங்கம் இலங்கை,இந்திய அதிகாரிகளுக்கு அறிவித்திருக்கிறது என்ற தகவலை ‘ரைம்ஸ் ஒவ் இந்தியா’வெளியிட்டிருக்கிறது. ஆனால் இரு நாடுகளினதும் அதிகார பூர்வமான தரப்புகள்இந்தத் தகவல்களை இன்னமும் உறுதிப்படுத்தவில்லை.

இதேவேளை, அகதிகள் தப்பிச் செல்வதற்காக மீன் பிடிப்படகு ஒன்றை வாங்கஉதவியவர்கள் தொடர்பான தகவல்கள்கிடைத்துள்ளன என்றும் கேரளா காவற்துறையினர் தமிழக கியூ பிரிவுப் காவற்தறையினருடன் இணைந்து விசாரணைகளை ஆரம் பித்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்.
10-10-2021

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.