சினிமா பிரதான செய்திகள்

மண்டேலா திரைப்படம் ஒஸ்கர் விருதுக்கு பரிந்துரை

யோகி பாபு நடித்து வெளியாகிய மண்டேலா திரைப்படம் ஒஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்து கடந்த ஏப்ரல் மாதம் நேரடியாக விஜய் டிவியில் வெளியான மண்டேலா தரைப்படம் பின்னர் நெட்பிளிக்ஸ் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியானதுடன் இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் மண்டேலா திரைப்படம் ஒஸ்கர் விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தியா சார்பில் இந்த ஆண்டு மொத்தம் 14 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே படம் மண்டேலா மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பட்டியலில் ஜோஜு ஜார்ஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பாராட்டுக்களை குவித்துள்ள மலையாளத் திரைப்படமான நாயட்டு ,வித்யா பாலனின் ஷெர்னி ஆகியனவும் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்த 14 படங்களில் ஒரு படம் தேர்வு செய்யப்பட்டு இந்தியா சார்பில் ஒஸ்கார் விருதுக்கு அனுப்பப்படும். தற்போது இதற்கான திரையிடல் கொல்கத்தாவில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.