இலங்கை பிரதான செய்திகள்

டின்கர் லசந்த காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலி

பிரபல பாதாள உலகக் கோஷ்டியைச் சேர்ந்தவரான டின்கர் லசந்த என அழைக்கப்படும் எச்.எல் லசந்த, களுத்துறை − தியகம பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

இருதரப்பினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

‘சன்ஷைன் சுத்தா’ கொலையின் பிரதான சந்தேகநபரான இவர், பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் ஆவார். அவர். மறைத்துவைத்திருந்த கைக்குண்டு மற்றும் துப்பாக்கியை காண்பிப்பதற்காக, அழைத்துச் சென்றபோது அவா் காவல்துறையினா் மீது அவர், துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும் அதன்பின்னர், காவல்துறையினரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போதே அவா் உயிரிழந்துள்ளார் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

. இந்த சம்பவத்தில் காயமடைந்த காவல்துறையினா் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.