இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

கொட்டகலை வாகன விபத்தில் ஒருவர் படுகாயம்

(க.கிஷாந்தன்)

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை டிரேட்டன் பகுதியில் நேற்று (04) இரவு லொறியும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக திம்புள்ள – பத்தனை காவல்துறையினா்  தெரிவித்தனர். முச்சக்கரவண்டியின்  சாரதியே  இவ்வாறு  படுகாயமடைந்து கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பத்தனையிலிருந்து கொட்டகலை பகுதியை நோக்கி சென்ற வெதுப்பக உணவுகளை  விற்பனை  செய்யும் நடமாடும் முச்சக்கர வண்டி தலவாக்கலையிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற லொறி ஒன்றுடன் பின்புறத்தில் மோதி ஏற்பட்ட   விபத்தில்  முச்சக்கரவண்டி பலத்த  சேதமடைந்துள்ளது.

லொறியையும், லொறியின் சாரதியும்  காவல்துறையினரால்  கைது  செய்யப்பட்ட  பின்னர்  பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து  குறித்து  திம்புள்ள – பத்தனை  காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.