இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்  ஒரு மேலதிக வாக்கினால் இன்று திங்கட்கிழமை (27) தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட கூட்டமானது  இன்றைய தினம் திங்கட்கிழமை (27) காலை 10.30 மணியளவில் மன்னார் பிரதேச சபையின்  தவிசாளர் எஸ்.எச்.எம்.முஹாஜிர் தலைமையில் இடம்பெற்றது.


தவிசாளரின் தலைமை உரையைத் தொடர்ந்து பிரதேச சபையின் செயலாளரினால் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கையினை வாசிக்கப்பட்டடு வரவு செலவுத் திட்டம் பகிரங்க வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.


இதன் போது   தமிழ்தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த 2 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர்களுமாக  மொத்தம் 11 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.


ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 உறுப்பினர்களும் தமிழர் விடுதலைக்கூட்டனி உறுப்பினர், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தலா ஒருவர் வீதம்  10 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.


இந்தநிலையில் ஒரு மேலதிக வாக்கு வித்தியாசத்தில் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.