Home சினிமா தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் – பாண்டவர் அணி வெற்றி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் – பாண்டவர் அணி வெற்றி

by admin

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், நாசர் தலைமையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றுள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டிருந்தனர். 

இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டதுடன் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன.

‘தேர்தல் செல்லாது’ என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணவும் உத்தரவிட்டது.

அந்தவகயில் இன்று காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பாடசாலையில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி, பலத்த காவல்துறைப் பாதுகாப்புகளுடன் இடம்பெற்றது. 

மொத்தம் 2 ஆயிரத்து 500 வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில் 1,150 வாக்குகள் தபால் மூலம் பதிவாகின. நடிகர் சங்க தேர்தலில் கே.பாக்கியராஜ் தலைமையிலான சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிட்டன. 

தலைவர், 2 துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என 29 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 

நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் , பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிட்டிருந்தனர். 

சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு பாக்யராயும் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும் பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோரும் போட்டியிட்டிருந்தனர். 
 
இந்நிலையில் பாண்டவர் அணி சார்ப்பாக போட்டியிட்ட அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாண்டவர் அணி சார்பாக தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1701 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More