
பொலன்னறுவை- மட்டகளப்பு பிரதான வீதியில் மனம்பிட்டிய கோட்டலிய பாலத்துக்கு அருகில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் அரலகங்வில- அருணபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் , மனைவி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
தனியார் பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட குறித்த விபத்திதில்முச்சக்கரவண்டியில் பயணித்த மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என மனம்பிட்டிய காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி மற்றுமொரு பேருந்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, முன்னால் வந்த தனியார் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ள நிலையில் , தனியார் பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது
Spread the love
Add Comment