
அம்மிக் குழவி காலில் தவறி விழுந்தமையால் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் வரணி வடக்கை சேர்ந்த கிட்டினன் தங்கலிங்கம் (வயது 48) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 27ஆம் திகதி வீட்டில் இருந்த மேசை மீதிருந்த அம்மி குழவி தவறி இவரது காலில் விழுந்துள்ளது. அந்நிலையில் காலில் ஏற்பட்ட வலி காரணமாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி காய்ச்சல் அதிகரித்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 2ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
Spread the love
Add Comment