Home இலங்கை சுமனரத்ன தேரர், ஞானசார தேரரை கைது செய்யுங்கள்- சிவில் பிரதிநிதிகள் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

சுமனரத்ன தேரர், ஞானசார தேரரை கைது செய்யுங்கள்- சிவில் பிரதிநிதிகள் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

by admin

மட்டக்களப்பு மங்களராமயவில் உள்ள அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மற்றும் பொதுபலசேனாவின் பொது செயலர் ஞானசார தேரர் ஆகியோரை கைது செய்ய வேண்டுமென பல்வேறு சிவில் அமைப்புகள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பார­பட்சம் மற்றும் வெறுப்புப் பேச்சு ஆகி­யவை தொடர்­பான சட்­டங்­களை மீறிய பௌத்த பிக்­குகள் அடங்­க­லாக அனை­வ­ரையும் உட­ன­டி­யாக நீதி­மன்­றத்­தில் முன்­னிலைப் படுத்­து­வ­தற்கு பொலிஸார் உட­னடி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும் என்றும்  சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

300 இற்கும் மேற்பட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எண்­ணிக்­கை­யிலே சிறு­பான்­மை­யி­ன­ரான இன மற்றும் மொழி­யி­னர்கள் மீது பௌத்த பிக்­குவின் தலை­மை­யிலே மேற்­கொள்­ளப்­படும் வன்­முறைத் தாக்­கு­தல்­க­ளை­யிட்டு அரசின் தண்­டிக்­காத மெத்­த­னப்­போக்­கை­யிட்டும், பொலிஸார் அப்­பட்­ட­மா­கவே செயற்­ப­டா­தி­ருந்­த­மை பற்றியும் நாம் சீற்­ற­ம­டைந்­தி­ருக்­கிறோம்.

இலங்­கையின் சட்டம் அதன் சகல குடி­மக்­க­ளுக்கும் சமத்­து­வத்­துக்கும், பாகு­பா­டின்­மைக்கும் மத சுயா­தீ­னத்­துக்கும் மத ஆரா­த­னைக்­கு­மான உரி­மை­களைத் தெளி­வாக உத்­த­ர­வா­தப்­ப­டுதியுள்ளது. எனினும் இலங்கை முழு­வ­திலும் மொழி மற்றும் மத சிறு­பான்­மை­யி­னர்­க­ளுக்கு எதி­ராக பெரும்­பான்­மை­யி­னர்­களால் அநே­க­மாக ஒரு­சில அல்­லது பல பௌத்த பிக்­கு­களின் தலை­மை­யின்கீழ் மேற்­கொள்­ளப்­படும் தாக்­கு­தல்­களின் எண்­ணிக்­கைகள் கவ­னத்திற் கொள்­ளப்­ப­டாமல் விடப்­ப­டு­கின்­றமை கண்­கூடு. சிவில் சமூகக் குழுக்கள் அப்­ப­டி­யான தாக்­கு­தல்­களை ஆவ­ணப்­ப­டுத்தி அப்­ப­டி­யான தாக்­கு­தல்­களை உரிய அதி­கா­ரி­க­ளுக்குத் தெரி­யப்­ப­டுத்­து­வதைத் தள­ராமல் மேற்­கொண்டு வரு­கின்­றன. இருந்தும், இந்தப் பிக்­கு­களின் வெறுப்­பான பேச்­சுக்கள், இனத்­து­வேஷம் போன்­றவை இலங்கைச் சட்­டத்தைத் தெளி­வாக மீறு­வ­தாக இருந்­துங்­கூட, குற்றம் இழைத்த இவர்­க­ளுக்கு எதி­ராக குற்­றப்­பத்­தி­ரிகை எப்­போ­துமே தாக்கல் செய்­யப்­ப­டு­வது கிடை­யாது.

பொது­ப­ல­சேனா அமைப்பின் பெயர்­போன தலைவர், , ஞான­சார தேரர் என்­பவர். தான்­தோற்­றித்­த­ன­மாகத் தன்­னையே ‘சிங்­க­ள­வர்­களின் மீட்பன்’ எனக் கூறி­வரும் சுரேஷ் பிரசாத் (மறு பெயர் டான் பிரி­யசாத்) என்­ப­வரின் கைது தொடர்­பிலே விடுத்த பதி­லீடு எமது கவ­னத்­துக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. ஞான­சார தேரர் ஒரு ‘இரத்த ஆறு ஓடும்’ என அச்­சு­றுத்­தி­ய­துடன் ‘இந்த விட­யத்தை நாம் கற்கள் மூலமும் தடித்­தண்­டுகள் மூலமும் இரத்தம் மூலமும் தீர்க்க வேண்டும். ஏனென்றால் அதுதான் அவர்­க­ளுக்குத் தேவை­யென்றால் அதைத்தான் அவர்கள் பெற்­றுக்­கொள்­வார்கள்’ என்று தெளி­வாகக் கூறி­யமை காணொளியில் பதி­வாகி இருக்­கி­றது.

இந்தச் சம்­பவ நிகழ்­விலே ஞான­சார தேரர் டான் பிரி­யசாத் என்­ப­வரின் கைதுக்கு பதி­ல­டி­யாக இலங்கை தௌஹீத் ஜமத் (ளுடுவுது) செய­லா­ள­ரான அப்துல் ரஸாக் என்­ப­வரை’ 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள்’ கைது­செய்­யும்­படி அறை­கூவல் விடுத்­தி­ருக்­கிறார். அதைத் தொடர்ந்து அப்துல் ரஸாக் மாளி­கா­வத்தை பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­ட­தாயும் தற்­போது தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தாயும் தக­வ­ல­றிந்து கொண்டோம்.

இந்தக் கைதும் அது இடம்­பெற்ற துரித கதியும் ‘சுயா­தீன’ நிறு­வ­ன­மாகத் திக­ழ­வேண்­டிய பொலிஸார் மீதுங்­கூட ஞான­சார தேரரின் வார்த்­தைகள் மகத்­தான செல்­வாக்குச் செலுத்­து­வதைப் புலப்­ப­டுத்­து­கி­றதாய் உள்­ளன. மோச­மான தீவிரக் குழுக்கள் குறிப்­பாக பௌத்த பிக்­குகள் மேற்­கொள்ளும் கட்­டுக்­க­டங்கா வன்­முறைத் தாக்­கு­தல்கள், அச்­சு­றுத்­தல்கள் மற்றும் பல்­வேறு தாக்­குதல் பற்றி வாழா­தி­ருக்கும் பொலி­ஸாரின் அச­மந்த நிலைப்­பாட்டின் பின்­பு­லத்­திலே இப்­ப­டி­யான துரித கைது ஆழ்ந்த பிரச்­சி­னைக்­கு­ரிய விட­ய­மாகும்.

ஞான­சார தேரரை உள்­ள­டக்­கிய ஒரே­யொரு சம்­பவம் இதுதான் என்­ப­தற்­கல்ல. ஆயினும், எமது அறி­வுக்கு எட்­டிய வரைக்கும் இது தொடர்­பிலே ஞான­சார தேர­ருக்கு எதி­ராக இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.அண்­மை­யிலே மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய ஆல­யத்தின் பிர­தம பிக்­கு­வான அம்­பிட்­டியே சுமங்­கல தேரர் என அடை­யாளம் காணப்­பட்­ட­வ­ரு­டைய இன்­னு­மொரு காணொளி வலைத்­த­ளங்­க­ளிலே பகி­ரப்­ப­டு­கி­றது.

அந்த தேரர் மோச­மான இனத்­து­வேஷ வார்த்­தை­க­ளையும் கீழ்த்­த­ர­மான மொழி­ந­டை­யையும் பயன்­ப­டுத்தி, சீருடை தரித்த பொலி­ஸாரின் முன்­னி­லை­யி­லேயே ஒரு தமிழ் அரச உத்­தி­யோ­கத்தர் மீது (கிராம சேவகர், புளு) வார்த்தைத் தாக்­கு­தலை மேற்­கொண்டார். அந்த அரச உத்­தி­யோ­கத்­தரைப் பாது­காக்­கவோ அல்­லது அந்தப் பௌத்த பிக்­குவைத் தடுக்­கவோ அவ­சி­ய­மான எந்த ஒரு நட­வ­டிக்­கை­யையும் எடுக்­காமல் அந்தப் பொலிஸார் அங்கே நின்று அவ­தா­னித்துக் கொண்டு நின்­றி­ருந்­தி­ருக்­கிறார். இறு­தி­யாக பொலிஸ் அதி­காரி தயங்­கி­ய­ப­டியும் பயத்­து­ட­னுமே அங்கே தலை­யிட்­ட­தாகத் தென்­ப­டு­கி­றது.

அம்­பிட்­டிய சுமங்­கல தேரர் தொடர்­பான அந்த அண்­மைய சம்­ப­வமும் இது­மட்­டு­மல்ல. இதே பிக்கு பல்­வேறு சம்­ப­வங்­க­ளிலே ஈடு­பட்டு இதே­போ­லவே கீழத்­த­ர­மான பேச்­சிலும் வன்­முறைத் தாக்­கங்­க­ளிலும் ஈடு­பட்­டி­ருக்­கிறார். ஒரு பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­த­ரையும் மற்றும் சில கிரா­மத்­த­வர்­க­ளையும் தாக்­கிய அண்­மைய சம்­ப­வமும் இதற்குள் அடங்கும். இது­வ­ரைக்கும் அம்­பிட்­டிய சுமங்­கல தேர­ருக்கு எதி­ராக எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

இப்­ப­டி­யான அச்­சு­றுத்­தல்­க­ளிலும் வன்­மு­றை­க­ளிலும் இருந்து சகல மக்­க­ளையும் பாது­காக்கும் அதன் கடமை மற்றும் சட்ட மன்ற உத்­த­ர­வா­தங்கள் தொடர்­பான அதன் கடப்­பாடு ஆகி­ய­வை­களை மீறு­வதாய் உள்­ள­தென்­பது தெளிவு.

இனப் பார­பட்­சத்தை இல்­லா­தொ­ழித்­த­லுக்­கான குழுவுக்கு ஓகஸ்ட் 2016 இலே சிவில் சமூ­கங்கள் இணையம் வழங்­கிய அறிக்­கை­யா­னது 2015 முதல் ஒரு வருட காலத்­துக்குள் கிறிஸ்­த­வர்கள் முகங்­கொ­டுத்த அவர்­க­ளுக்கு எதி­ரான 132 சம்­ப­வங்கள், முஸ்­லிம்கள் முகங்­கொ­டுத்த முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான 141 சம்­ப­வங்கள் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­யி­ருந்­தது.

சமய வணக்க ஸ்தலங்கள் மீதான தாக்­கு­தல்கள் மற்றும் ஆரா­தனை அல்­லது தொழுகை வேளை­க­ளிலே பல்­வேறு சிறு­பான்மை மதக்­கு­ழுக்­க­ளுக்கு இடை­யூ­றுகள் விளை­விக்­கப்­பட்­டமை போன்­ற­வைகள் இவை­களுள் உள்­ள­டங்கும். 2014 கல­கத்­திலே முஸ்­லிம்­களைப் படு­கொலை செய்த சம்­ப­வத்தை விசா­ரிக்க அதி­கா­ரி­களால் இய­லா­தி­ருப்­பது அல்­லது விரும்­பா­தி­ருப்­பது பௌத்த தீவி­ர­வா­திகள் விட­யத்தை அர­சாங்கம் ஆழமாக கவ­னத்திற் கொள்­ள­வில்லை என்­பதை மேலும் ருசுப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.

இப்­ப­டி­யான இனத்­து­வேஷ காழ்ப்­பு­ணர்வுப் பேச்­சுக்­களை பகி­ரங்­க­மா­கவும் வினைத்­தி­ற­னு­டனும் கண்­டிக்­கவோ அல்­லது அப்­ப­டி­யான குற்றம் இழைத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக உட­னடி நட­வ­டிக்கை எடுக்­கவோ விரும்­பாமல் இருக்கும் அர­சாங்­கத்தின் அச­மந்­தப்­போக்­கினால் நாம் ஆழ்ந்த விரக்­தியும் கோபமும் கொண்­டுள்ளோம். பார­பட்சம் மற்றும் வெறுப்புப் பேச்சு ஆகி­யவை தொடர்­பான சட்­டங்­களை மீறிய பௌத்த பிக்­குகள் அடங்­க­லாக அனை­வ­ரையும் உட­ன­டி­யாக நீதி­மன்­றத்­திலே முன்­னிலைப் படுத்­து­வ­தற்கு பொலிஸார் உட­னடி நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

வெறுப்புப் பேச்­சுக்­க­ளையும் மத மற்றும் இன ரீதி­யிலே எண்­ணிக்­கை­யின்­படி சிறு­பான்­மை­யான மக்கள் மீதான வன்­முறை அச்­சு­றுத்­தல்­க­ளையும் பரப்­பி­வரும் அத்­த­கைய குழுக்கள் பொது­மக்­க­ளிலே ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய செல்­வாக்­கையும் தாக்­கத்­தையும் அர­சாங்கம் சீரி­ய­ஸாகக் கவ­னத்திற் கொள்­ள­வேண்டும். எவ்­வித பயமோ அல்­லது விளைவைப் பற்­றிய அச்­சமோ இல்­லாது அதே­போன்ற பாணி­யிலே சிவி­லி­யன்­களும் செயற்­பட அனு­ம­திக்கும் ஒரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்­து­வதாய் அது அமை­யலாம். இதற்­கான தெளி­வான ஒரு உதா­ர­ண­மாக, ‘சிங்­கள பௌத்த வீர­தீ­ரர்கள்’ அல்­லது ‘சிங்­கள மக்­களின் இரட்­ச­கர்கள்’ என்று தம்மைத் தாமே பிர­க­ட­னப்­ப­டுத்தி முஸ்­லிம்­களை எரிப்­ப­தாயும் கொல்­வ­தாயும் அச்­சு­றுத்தும் ஒரு குழு­வினர் தமது ‘உன்­னத நோக்­கத்தை’ சேவிக்க பெரு­ம­ள­வி­லான ஆட்­சேர்ப்­புக்கு அழைப்பு விடுத்து, மக்­களைத் தப்­பான தக­வல்­களின் மூலம் இன மற்றும் மத ரீதி­யிலே தூண்டி வரு­வதைக் குறிப்­பி­டலாம்.

மத வன்­முறை நட­வ­டிக்­கைகள், மத மற்றும் மொழி­யின ரீதி­யிலே எண்­ணிக்­கை­யிலே சிறு­பான்­மை­யோ­ருக்கு எதி­ராக விடுக்­கப்­படும் வன்­முறை அச்­சு­றுத்­தல்கள் மற்றும் வெறுப்புப் பேச்­சுக்கள் ஆகி­ய­வற்­றுக்கு எதி­ராக சீரான ஒரு பதி­லீட்­டினை பொலிஸார் கடைப்­பி­டிக்க வேண்டும். சட்­டத்தின் முன்­பாக சமத்­து­வத்தின் அடிப்­படைக் கொள்­கையின் கீழ், மேற்­ப­டி­யான நடத்­தை­க­ளிலே ஈடு­படும் பௌத்த பிக்­குகள் உட்­பட அனை­வரும் பொறுப்பு கூறும்­படி செய்­யப்­படல் வேண்டும். எவ்­விதப் புற­ந­டையும் இல்­லாது சமத்­துவச் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வது பொலி­ஸாரின் கடப்­பா­டாகும்.

மேலும், சமத்­து­வத்தின் கொள்­கை­யையும் அபிப்­பி­ரா­யத்­தையும் பாது­காப்­பது சகல சட்டம் அமுல்­ப­டுத்தும் அதி­கா­ரி­க­ளுக்கும் மிக மிக முக்­கி­ய­மா­ன­தாக வேண்டும். அர­சாங்கம் பகி­ரங்­க­மாக விடுத்த அதற்­கான அர்ப்­ப­ணியைப் பிர­க­ட­னப்­ப­டுத்­திய நல்­லி­ணக்­கத்­துக்கு இது அவ­சி­ய­மா­ன­தாகும். மத மற்றும் மொழி­யின எண்­ணிக்கைச் சிறு­பான்­மை­யி­னர்கள் வெறுப்புப் பேச்சு மற்றும் வன்­முறை அச்­சு­றுத்தல் ஆகி­ய­வற்­றுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டும்­போதும், பார­பட்­ச­மான செயற்­பா­டு­க­ளிலே ஈடு­ப­டும்­போதும், அர­சாங்கம் அதை­யிட்டு வாழா­தி­ருந்­தாலோ அல்­லது அவற்­றை­யிட்டுப் பாரா­மு­க­மாக இருந்­தாலோ நல்­லி­ணக்கம் தொடர்­பான அதன் கலந்­து­ரை­யா­டல்கள் மேற்­பூச்­சா­ன­தா­கவும் நேர்­மை­யற்­ற­தா­கவும் தொனிக்­கலாம்.

பின்­வரும் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளும்­படி பொலி­ஸுக்கு நாம் அவ­ச­ர­மாகக் கோரிக்கை விடுக்­கிறோம்.

1) நவம்பர் 15, 2016 அன்று ஞான­சார தேரர் விடுத்த கூற்­று­க­ளுக்­காக அவரை உட­ன­டி­யாக கைது செய்ய வேண்டும். அது இன முறு­கல்­க­ளுக்கு எண்ணெய் வார்த்து, எண்­ணிக்கை ரீதி­யிலே சிறு­பான்­மை­யான மத மற்றும் மொழியினங்களுக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி அச்சுறுத்துவதாய் இருக்கிறது. ஞானசார தேரரின் முன்னைய நடத்தைகள் தொடர்பில் பகிரங்க தளத்திலே போதியளவு சான்றுகள் உள்ளன.

2) மட்டக்களப்பு மங்களராமயவில் உள்ள அம்பிட்டிய சுமங்கலே தேரரை, சட்டத்தைப் பற்றி எள்ளளவும் கரிசனை கொள்ளாத விதத்திலே அமைந்த அவரது பல்வேறு இனத்துவேஷச பேச்சுகளுக்காகவும் பல்வேறு சந்தர்ப்பங்களிலே இழைத்த வன்முறைகளுக்காகவும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.

3) இதர அனைத்து தீவிரக் குழுக்களையும் நபர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் விசாரணை செய்து சட்டத்தின்கீழ் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

4)அளுத்கம சம்பவத்தை மீளச் செயற்படுத்துவது தொடர்பிலே ஞானசார தேரர் விடுத்த அச்சுறுத்தல் பற்றி இலங்கை முஸ்லிம் கவுன்சில்  (MCSL) செய்த புகாரின்பேரில் மேற்கொண்ட நடவடிக்கையின் நிலைமை தொடர்பிலே பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More