173
கென்யாவின் தலைநகர் நைரோபியில் பெட்ரோல் கொள்கலன் லொரி ஒன்று வெடித்து ஏனைய வாகனங்களுடன் மோதியதில் ஏற்பட்ட தீவிபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வீதியில் சென்று கொண்டிருந்த பெட்ரோல் கொள்கலன் லொரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஏனைய வாகனங்கள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்தில் 11 வாகனங்கள் தீயில் கருகியுள்ளதாகவும் படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love