148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். நேற்றைய தினம் அவர் அமெரிக்காவிற்கு புறப்பட்டுச் சென்றதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவ சிகிச்சைக்காக அவர் இவ்வாறு அமெரக்காவிற்கு சென்றுள்ளார். மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக மூன்று மாதங்கள் அமெரிக்காவில் தங்கியிருக்க பசில் ராஜபக்ஸவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. பசில் ராஜபக்ஸவிற்கு விற்கு எதிராக பல்வேறு மோசடி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love