வர்தா கரையை நெருங்க நெருங்க சென்னையில் காற்றின் வேகமும் அதிகரிக்கிறது –
சென்னையில் 52 மரங்கள் விழுந்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு –
சென்னையில் தற்போது 67 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது –
வர்தா புயல் கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் அறிவிப்பு –
உதவி எண்கள்: 044 – 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570 –
சென்னை விமான நிலைய ஓடுபாதை மூடப்படுகிறது –
சென்னை அண்ணாசாலை, வால்டாக்ஸ் சாலைகள் மரங்கள் விழுந்தன –
சாலையில் விழும் மரங்கள் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன –
சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ. தொலைவில் வர்தா புயல் மையம் –
பழவேற்காடு- ஸ்ரீஹரிகோட்டா இடையே பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் வர்தா புயல் கரையை கடக்கும் –
சென்னைக்கு வரும் ரயில்கள் வேறு மார்க்கங்களில் திருப்பிவிடப்பட்டன –
தாழ்வான பகுதிகளில் இருந்து 4622 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் –
சென்னை திருவொற்றியூரில் வீட்டு சுவர் இடிந்து 2 பேர் காயம் –
பேசின்பிரிட்ஜ், மணலி, தாம்பரம், மகாபலிபுரம், புதுவையில் பேரிடர் மீட்பு குழு முகாம் –
சென்னை கடற்கரை- வேளச்சேரி புறநகர் ரயில் போக்குவரத்தும் ரத்து –
சென்னை- கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில்கள் ரத்து –
சென்னையில் 25 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன
சென்னையில் 9 விமானங்கள் தாமதம்- 5 விமான சேவைகள் ரத்து –
திருவள்ளூர், பழவேற்காடு பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது –
சென்னை நேப்பியார் பாலம் அருகே மரம் விழுந்தது-
போக்குவரத்து மாற்றம் – சென்னையில் சாலைகள் வெறிச்சோடின -சென்னை பேருந்துகளில் மக்கள் கூட்டம் இல்லை –
சென்னையில் பலத்த காற்று வீசுகிறது -கடற்கரை சாலையில் வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதி -பலத்த காற்று வீசுவதால் விமானங்கள் ரத்து -விமானங்கள் அருகே உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்படுகின்றன –
சென்னையை நெருங்குகிறது வர்தா புயல் -சென்னைக்கு கிழக்கே 100 கி.மீ தொலைவில் வர்தா புயல் –
சென்னையை நோக்கி 13 கி.மீ வேகத்தில் நகருகிறது வர்தா புயல் -சென்னையில் கரையை கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் –
சென்னையில் பேய் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது –
சென்னை கோட்டூர்புரத்தில் மரம் முறிந்து விழுந்தது- 2 பேர் படுகாயம் –
வர்தா புயல் பழவேற்காடு – கும்மிடிப்பூண்டி இடையே கரையை கடக்கும் –
வானிலை மையம் -கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் எழுவதால் மீனவர்கள் அச்சம் –
கடற்கரை அருகே வசிப்பவர்கள் அவசரமாக வெளியேற்றம் –
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3,500 பேர் இடமாற்றம் –
24 மணிநேரத்தில் சென்னையில் 6 செ.மீ மழை -சென்னைக்கு கிழக்கே 142 கி.மீ. தொலைவில் வர்தா புயல் –
வர்தா புயலால் பழவேற்காட்டில் பலத்த கடல் காற்று வீசி வருகிறது –
பலத்த காற்றால் பழவேற்காட்டில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன -பழவேற்காட்டில் சூறைக்காற்று வீசி வருவதால் கம்பிகள் அறுப்பட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன
தீவிரமானது வர்தா புயல்… 200 மீனவர்கள் கரை திரும்பவில்லை பதட்டத்தில் உறவினர்கள்:-
வர்தா புயல் தீவிரமடைந்து இன்று பிற்பகல் கரையை கடக்க உள்ளது. புயல் தீவிரம் அடைந்துள்ளதால் நான்கு நாட்களுக்கு முன்பு கடலுக்குள் சென்ற நாகை மாவட்ட 200 மீனவர்கள் கரை திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பீதியில் உள்ளனர்.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் இன்று பிற்பகல் சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னைக்கு 102 கி.மீ துரத்தில் மையம் கொண்டுள்ள வர்தா புயல் மேற்கு திசை நோக்கி 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இன்று பிற்பகலில் சென்னைக்கு அருகே கரையை கடக்கும் போது 120 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் 36 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. வர்தா புயல் சென்னையை நெருங்கி வருவதால் நள்ளிரவு தொடங்கி விடிய விடிய காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மேலும், கடந்த இரண்டு நாட்களுக்கும் மேலாகவே வானிலை ஆய்வு மையம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது.
நாகை 200 மீனவர்கள் கரை திரும்பவில்லை
நாகை மாவட்ட மீனவர்கள் 4 நாட்களுக்கு முன்னதாக கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். இதனிடையே வர்தா புயல் தீவிரமடைந்து இன்று கரையை கடக்க உள்ளதால், கடலில் கொந்தளிப்பு அதிகமாக உள்ளது. இதனால் கடலுக்குள் சென்ற 200 மீனவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் பீதி அடைந்துள்ளனர்.
இருட்டிய பழவேற்காடு கடல் பகுதியில் பலத்த கடல் காற்று வீசுவதால் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன. சூறைக்காற்றால் மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. காற்று பலமாக வீசுவதால் பழவேற்காடு மக்கள் வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
பாதுகாப்பான இடத்தில் மக்கள்
சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் இருந்தவர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 3500க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். தொடர்ந்து பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கடல் கொந்தளிப்பு திருவொற்றியூர், எண்ணூர் ஆகிய இடங்களில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. திருவொற்றியூர் பகுதியில் கடல் தடுப்பு கற்களைத் தாண்டி அருகில் உள்ள வீடுகளுக்கு தண்ணீர் புகுந்துள்ளது. இதனால், கரையோர மக்கள் அச்சத்தில் உள்ளனர். கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்படும் வேலைகள் நடைபெற்று வருகின்றன.