Home இலங்கைகட்டுநாயக்காவிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கவிருந்த விமான சேவைகள் இரத்து :

கட்டுநாயக்காவிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கவிருந்த விமான சேவைகள் இரத்து :

by admin

சென்னையில் நிலவுகின்ற மோசமான காலநிலையை தொடர்ந்து இன்றையதினம்  கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கி பயணிக்கவிருந்த சகல விமான சேவைகளும். இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன .

மேலும் காங்கேசன்துறையிலிருந்து, 400 கிலோமீற்றர் தொலைவில், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வர்தா புயல் காரணமாக, வடக்கு, வடகிழக்கு மற்றும் மன்னார் கடற்பரப்பை அண்மித்துள்ள மீனவர் மற்றும் கடற்படையினரை கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

புயலானது, இந்தியாவின் மேற்குப் பக்கமாக நகர்ந்துகொண்டிருப்பதால் 100-120 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் எனவும் காங்கேசன்துறையிலிருந்து 200-300 கிலோ மீற்றர் தூரத்தில் கடும் மழை பெய்யக் கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More