அமெரிக்காவில் இருந்து ஜேர்மனிக்கு 530 பேருடன் சென்ற லுப்தான்ஸா விமானம் வெடிகுண்டு மிரட்டலையடுத்து நியூஜோர்க் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹஸ்டன் நகர விமான நிலையத்தில் இருந்து ஜேர்மனியின் பிராங்க்பேர்ட் நகருக்கு புறப்பட்டு சென்ற விமானம் நடுவானில் சுமார் ஆயிரம் மைல் தூரத்தை; கடந்து சென்றபோது, லுப்தான்ஸா நிறுவனத்துக்கு வந்த ஒரு அழைப்பில் குறித்த விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்ததனைத் தொடர்ந்து விமானிக்கு வழங்கப்பட்ட அவசர தகவலைத் தொடர்ந்து நியூஜோர்க் நகரில் உள்ள ஜோன் எப். கென்னடி விமான நிலையத்தில் ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த 530 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, மோப்பநாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருவதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.